83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்வர் 68 வயதான விஜய் ரூபானியும் பலியானார்.
இந்நிலையில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன மூத்த அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் இன்று உயர்மட்ட கூட்டம் நடத்தியது. பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் பயணிகள் சேவைக்கான ஒழுங்குமுறைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த கூட்டம் நடந்தது.
அதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை பற்றிய சமீபத்திய செயல் தரவுகளை இயக்குநரகம் மறுஆய்வு செய்தது. அவற்றில் போயிங் 787 விமானத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று ஜூன் 12 முதல் ஜூன் 17 வரை மொத்தம் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 66 விமானங்கள் போயிங் 787 ரக விமானங்கள் ஆகும் என தெரிவித்து உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!