மொத்தம் 2 கோடி மோசடி.. போலி சாமியார்கள் அதிரடியாக கைது.. பணத்தை இழந்து தவிக்கும் 20க்கும் மேற்பட்டோர்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள புங்கவர்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். போலி சாமியார் இவர், ஆசிர்வாதம் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மோசடி செய்து வருகிறார். பூஜை செய்தால் தொழிலை பெருக்கி பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மோசடி செய்துள்ளார்.
இவரது ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதில், தூத்துக்குடி ஏரல் பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் ஆகியோர் போலி சாமியார் பாலசுப்பிரமணியனிடம் சுமார் 77 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டனர்.
இதேபோல், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், மாரிமுத்து, இருளப்பன் ஆகியோர் சுமார் 44 லட்சம் ரூபாய் மோசடியில் இழந்ததும், எட்டயபுரத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணு 5 லட்சம் ரூபாய் மோசடியில் இழந்ததும், சாந்தி 17 லட்சம் ரூபாய் மோசடியில் இழந்ததும், திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன், கமலக்கண்ணன், திருமலைசாமி ஆகியோர் சுமார் 90 லட்சம் ரூபாய் மோசடியில் இழந்ததும், 20க்கும் மேற்பட்டோர் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் இழந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, தலைமறைவாக இருந்த இரண்டு போலி சாமியார்களான பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!