100 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்.!! கோர விபத்தில் ஒருவர் பலி!! 21 பேர் படுகாயம் !!

 
காயத்ரி

கோடை விடுமுறையையொட்டி குடும்பத்துடன் மன்னார்குடியில் இருந்து  ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நாட்கள் சுற்றுலாவாக மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு வந்த அவர்கள், கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு பழனி  கோவிலுக்கு சென்று சாமி தரசினம் செய்ய திரும்பியுள்ளனர். மலைச் சாலையில் 7-ஆவது கொண்டை ஊசி வளைவில் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயத்ரி

இதில் வாகனத்தில் பயணம் செய்த மன்னார்குடியைச் சேர்ந்த முகேஸ்வரன் (15), திவ்யா (29), தன்சிகா (4), கவுரி (18), காயத்ரி (21), பாரதி செல்வன் (15), ஓட்டுநர் இளம்பரிதி (25) உட்பட 22 பேர் பலத்த காயமடைந்தனர். வாகனம் விபத்துக்குள்ளானதை அறிந்த பழநி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் தஞ்சாவூர் அருகேயுள்ள மடிகை காந்தி காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் (48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயத்ரி

முன்னதாக சுற்றுலா வேன் மலை சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, பாறையின் மீது மோதியதால் கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!