கோர விபத்து... லாரியும் காரும் நேருக்கு நேர் மோதல்... 8 பேர் பலி, 13 பேர் படுகாயம்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் இன்று மார்ச் 10ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை லாரி - வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே அதிகாலை 2.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி திவாரி தெரிவித்துள்ளார். சிதியிலிருந்து பஹ்ரி நோக்கி லாரியும், ஒரு குடும்ப உறுப்பினர்களுடன் மைஹார் நோக்கிச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதாக கூறியுள்ளார்.
அதில் வாகனத்தில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறினார். படுகாயமடைந்த 14 பேரில், 9 பேர் மேல் சிகிச்சைக்காக ரேவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு படுகாயமடைந்தவர்களில் ஒருவர் பலியானதாக சிதி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார். மற்றவர்கள் சிதி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக திவாரி கூறியுள்ளார். வாகனம் தவறான திசையில் வந்ததே விபத்திற்கான காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். குழந்தையின் மொட்டை எடுக்கும் நிகழ்ச்சிக்காக சென்றபோது வாகனம் விபத்தில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!