பயங்கரம்... லாரி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து 22 தொழிலாளர்கள் பலி!
அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி, ஆபத்தான மலைப்பாதையில் செல்கையில் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த துயரத்தில் 22 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இறந்தவர்கள் அனைவரும் அசாமின் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் ஒப்பந்த பணிக்காக அருணாச்சலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். தீவிரமான சரிவுகள், ஆபத்தான வளைவுகள் நிறைந்த சாலை காரணமாக மீட்பு பணி மிகுந்த சிரமத்துடன் நடந்தது.

இதுவரை 17 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம், ராணுவம் மற்றும் மீட்புப்படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், அதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
