இருசக்கர வாகனம் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி... குழந்தைகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சோகம்!
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சோமம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் 33 வயது பிரகாஷ். இவர் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில்ல் இவருக்கு வசந்தா என்கிற மனைவியும், ரித்திகா என்ற 11 வயது மகளும், கவின் என்ற 9 வயது மகனும் உள்ளனர்.
இவர் பிப்ரவரி 20ம் தேதி நேற்று வியாழக்கிழமை இரவு வாழப்பாடியில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் 2 குழந்தைகளுடன் சோமம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்தார்.

சோமம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஆட்கொல்லி வளைவு அருகே வந்த போது எதிரே திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து வந்த ஒரு வேன் மோதியது. இதில் எதிர்பாராதமாக 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயம் அடைந்த ரித்திகா, கவின் இரண்டு பேரும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனது குழந்தைகள் கண் முன்னேதந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
