அரசு பள்ளியில் லேட்டாக வந்த மாணவிகளுடன், ஆசிரியைகளும் வெளியே நின்ற காட்சி - வைரலாகும் வீடியோ!
பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நேர நிர்வாகத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வழக்கம்போல காலை வழிபாட்டுக் கூட்டம் (Assembly) தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படத் தொடங்கியதும், பள்ளியின் நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டன. அப்போது பள்ளிக்குத் தாமதமாக வந்த ஏராளமான மாணவிகள் மற்றும் சில ஆசிரியர்கள் உள்ளே நுழைய முடியாமல் வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தலைமை ஆசிரியர், "மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே தாமதமாக வரக்கூடாது" எனத் திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் அனைவருக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுவாக மாணவர்கள் தாமதமாக வந்தால் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், ஆசிரியர்களுக்கும் அதே விதிமுறை பொருந்தும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளதாகப் பொதுமக்கள் பலரும் தலைமை ஆசிரியரைப் பாராட்டி வருகின்றனர். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வந்தால்தான் மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்க்க முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
