குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் வீடியோ... கூடாரத்திற்குள் திடீரென நுழைந்த எலெக்ட்ரிக் பாம்பு...!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் தினமும் வைரலாகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையாக சிரிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
This is the funniest thing I’ve seen on the internet today pic.twitter.com/o8x6PYXZaK
— NO CONTEXT HUMANS (@HumansNoContext) March 23, 2025
அந்த வீடியோவில் ஒருவர் எலக்ட்ரானிக் பாம்பை ரிமோட் மூலமாக கண்ட்ரோல் செய்கிறார். அந்த இடம் பார்ப்பதற்கு ஒரு கடற்கரை போன்று இருக்கும். இந்நிலையில் அங்கு ஒருவர் கூடாரம் அமைத்து படுத்திருந்தார்.அந்த கூடாரத்திற்குள் ஒருவர் எலக்ட்ரிக் பாம்பை கண்ட்ரோல் செய்து அனுப்பிய நிலையில் அவர் உண்மையாகவே பாம்பு தான் வந்துவிட்டது என நினைத்து கூடாரத்துடன் கவிழ்ந்து கீழே விழுகிறார்.
பின்னர் ஒரு நிமிடம் யோசித்த அவர் அங்கிருந்து எழுந்து ஓடிவிட்டார். இந்த வீடியோவை எடுத்துக் கொண்டிருந்தவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். போலியான பாம்பை உண்மையென நம்பி தலைதெறிக்க ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!