அட!! படிப்பிற்கு வயது தடை இல்லை!! 56 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி!!

 
தனம்

படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை. ஆர்வமும், நம்பிக்கையும் இருந்தால் வாழும்காலம் வரை படித்துக்கொண்டே இருக்கலாம். பள்ளிப்படிப்பை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தொடர முடியாத சிலர் தனித்தேர்வர்களாக எழுதி மீண்டும் வெற்றிபெறுகின்றனர். அதே போல் 56 வயது பெண் ஒருவர் பேரன்கள், பேத்திகள் வந்த பிறகும் விடாமுயற்சி, நம்பிக்கையுடன் படித்து தேர்வில் வெற்றி அடைந்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 91.39 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  ஏப்ரல் 6 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை நடைபெற்றது.

தனம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 .39லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.  பொதுத்தேர்வு முடிவுகள்  நேற்று காலை 10 மணிக்கு www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in இணையதள முகவரியில் வெளியாகின. மேலும் மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16% தேர்ச்சி. மாணவிகள் 94.66% தேர்ச்சி. அதேபோல் 1023 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வராகத் தேர்வு எழுதி 56 வயது பெண் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்  தனம்.இவர் 1980ம் ஆண்டு 8ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

தனம்

பின்னர் அவருக்குத் திருமணம் நடைபெற்றதால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. இதையடுத்து கணவன், மகன்கள், பேரன் பேத்திகள் என குடும்பம் வளரத் தொடங்கியதால் பொறுப்புக்கள் அதிகமாகின. பிள்ளைகள் தனித்தனியாக செட்டில் ஆகி விட அவருடைய நேரத்தை பயனுள்ளதாக கழிக்க யோகா கற்றுக்கொள்ள தொடங்கினார். அதன்பிறகு பள்ளிப்படிப்பையும் தொடர முடிவு செய்தார். அதன்படி தனித் தேர்வராக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.  இந்த தேர்வு முடிவுகளில்  தனம் 247 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தனம் தனது மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கொண்டாடினார். மேலும் தேர்ச்சி பெற்ற தனத்திற்குப் பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web