உஷார் பெண்களே ... கூட்ட நெரிசலில் துணிக் கடையில் கைவரிசை காட்டிய பெண்... உறைய வைக்கும் வீடியோ!
டெல்லியின் இதயப்பகுதியான ஜமா மஸ்ஜித் சந்தையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நேற்று நடந்த இந்தச் சம்பவம், திருடர்களுக்கு ஒரு தகுந்த பாடமாக அமைந்துள்ளது. மக்கள் கூட்டத்தால் அலைமோதும் அந்தச் சந்தையில், குறிப்பாகத் துணிக் கடைகளில் பெண்களின் கவனச்சிதறலைப் பயன்படுத்திப் பைகளில் இருந்து பொருட்களைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், துணிக் கடைக்குள் நைசாக நுழைந்து மற்றவர்களின் பைகளில் கைவரிசை காட்டிய ஒரு பெண்ணை, வாலிபர் ஒருவர் தனது சமயோசித புத்தியால் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
🚨 DELHI: Girl tries stealing woman's purse at Jama Masjid. Man recording video grabs her instantly!
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 18, 2026
Stay alert in crowds & guard your belongings. Safety is YOUR responsibility.
pic.twitter.com/VwbxsuZTfM
அந்தப் பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்ட அந்த இளைஞர், சத்தமில்லாமல் அவருக்குப் பின்னாலேயே சென்று தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். மற்றவர்கள் துணிகளைத் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருந்தபோது, அந்தப் பெண் ஒருவரது பையிலிருந்து பொருளைத் திருடிய அடுத்த நொடியே, "உன்னோட திருட்டு வேலையை முழுசா வீடியோ எடுத்துட்டேன்!" என்று அந்த இளைஞர் உரக்கக் கூறி அதிர வைத்தார். இதனால் நிலைகுலைந்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.
இருப்பினும், அந்த இளைஞர் விடாமல் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி, கடையில் இருந்தவர்களிடம் வீடியோ ஆதாரத்தைக் காண்பித்தார். வீடியோவில் திருட்டுச் சம்பவம் அப்பட்டமாகத் தெரிந்ததால், அந்தப் பெண் வசமாகச் சிக்கிக் கொண்டார். இந்தத் துணிச்சலான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 'காட்டுத்தீயாய்' பரவி வருகிறது. "திருடன் மட்டுமல்ல, திருடிகளும் ஜாக்கிரதை" என எச்சரிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. துணிச்சலுடன் திருடியைப் பிடித்துக் கொடுத்த அந்த இளைஞருக்கு இணையவாசிகள் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
