பகீர்... தேநீர் கடையில் டீ குடிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்!

 
சென்னை
 

மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் வசிக்கும் 31 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் மாதவரம் ஜி.என்.டி. சாலையில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் திடீரென அவரது தோளில் கையை வைத்து, ஆபாசமாக பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெண், உடனே அவரது கையை தட்டி விட்டு, மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவி பாலியல் இளம்பெண் பலாத்காரம் உல்லாசம்

புகார் பெறப்பட்டதும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு இருந்த சந்தேக நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த மோசஸ் அப்பு (25) என உறுதி செய்யப்பட்டது.

போலீஸ்

இதையடுத்து, மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகோபால், மோசஸை கைது செய்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட மோசஸுக்கு எதிராக ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!