கையில் தாலியுடன் மேடையேறிய பெண்... தவெக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு - பாதியிலேயே முடிந்த நிகழ்ச்சி!
திருநின்றவூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ராஜ்மோகன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த இந்தக் கூட்டத்தில், திடீரென ஒரு பெண் மேடைக்கு வந்து ராஜ்மோகனிடமிருந்த மைக்கை பிடுங்கினார்.
தான் ஒரு ஐடி ஊழியர் என்றும், தங்கப் பதக்கம் வென்றவர் என்றும் கூறிக்கொண்ட அந்தப் பெண், கையில் தாலியை ஏந்தியபடி தனக்கு நீதி வேண்டும் என்று ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள் உடனடியாக மைக் இணைப்பைத் துண்டித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் விசாரித்தபோது, அவருக்குச் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க, நலத்திட்ட உதவிகளை அவசர அவசரமாக வழங்கிவிட்டு நிகழ்ச்சியைப் பாதியிலேயே முடித்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"தலைவர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது மிகவும் மோசமான உதாரணம். தவெக-வின் வளர்ச்சியைக் கண்டு நிலைதடுமாறி அவர் இப்படி உளறுகிறார். தவெக கொள்கை இல்லாத கூட்டம் என்று உதயநிதி கூறியிருப்பது நகைச்சுவையாக உள்ளது. தவெக ஆரம்பத்திலிருந்தே 'அதிகாரப் பகிர்வு' குறித்துப் பேசி வருகிறது. தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்துத் தலைவர் விஜய் தான் முடிவெடுப்பார். நாங்கள் யாருடைய பின்னாலும் 5 சீட், 10 சீட்டுக்காக நிற்க மாட்டோம்; அதிகாரத்தைத்தான் கேட்போம்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
