ரூபாய் நோட்டுகளால் பல்லக்கில் வந்த சாமிகளுக்கு மாலை !
Apr 11, 2025, 13:09 IST

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் ஹரிஹரா தாலுகா கொக்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேய உற்சவம் என்ற பெயரில் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிக்கான ஆஞ்சநேய உற்சவம் நேற்று நடைபெற்று வருகிறது.
ஆஞ்சநேயர், பீரதேவரு, துர்காம்பா, மாதங்கியம்மா தேவி சாமிகள் பல்லக்குகளில் கோவிலில் இருந்து வீடு, வீடாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அப்போது ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சாமிகளுக்கு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்துள்ளனர்.
அதாவது ரூ10 , ரூ50 , ரூ100 , ரூ200 மற்றும் ரூ 500 நோட்டுகளால் மாலை அணிவித்துள்ளனர். மொத்தம் 4 சாமிகளுக்கும் சேர்த்து ரூபாய் நோட்டு மாலைகள் மூலம் ரூ.15 லட்சத்து 69000ஐ பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி உள்ளனர். இதில் ஆஞ்சநேய சாமிக்கு மட்டும் ரூ.14 லட்சத்து 80000 மதிப்பிலான நோட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web