கருமம்.. நடுரோட்ல பொண்ணுங்களா இப்படி...கதறிய போலீசார்.. சரக்கடிச்சதுல தகராறு.. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்!

 
போதை இளம்பெண்

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சோனாலி உள்ளிட்ட இளம்பெண்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டனர். சாலையில் நடந்த சென்றவர்களிடம் வம்பிற்கு செல்வது போல் பெண்கள் ரகளை செய்துள்ளனர்.  முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதுபற்றி அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 6 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

சோனாலி

\அப்போது, இளம்பெண்கள் கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் மதுபோதையில் இதுபோன்று ரகளையில் ஈடுபட்டதும், அப்பகுதில் திருமண விழாவில் உணவு பரிமாறும் வேலைக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ரகளையில் ஈடுபட்ட பெண்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர், இளம் பெண்களை கண்ணகி நகரில் உள்ள அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.  இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர்கள் வீடியோ எடுத்து, இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ரகளையில் ஈடுபட்ட 6 இளம்பெண்களில் சோனாலி என்ற பெண் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  மாடியில் இருந்து குதித்ததில் இடுப்பு எலும்பு, கால்கள் முறிந்ததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இளம்பெண் சோனாலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனாலி

காதலனுடன் சேர்ந்து மதுஅருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web