திருமணமான 2 வாரங்களில் வாலிபர் தற்கொலை!

 
போலீஸ்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் திருமணமான 2 வாரங்களில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகர் 5-வது தெருவை சேர்ந்த சண்முகநாதன் மகன் கண்ணன் (28). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கண்ணன் திருமணத்திற்கு பின்பு வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே தகராறு இருந்து வந்துள்ளது. 

உத்தரபிரதேச போலீஸ்

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது