சிகரெட் நெருப்பு பஞ்சு மெத்தையில் பற்றி எரிந்து மூச்சுத்திணறி இளைஞர் பரிதாப பலி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடம்பி கிராமத்தில் வசித்து வருபவர் நேதாஜி. நேதாஜிக்கு 34 வயதாகும் நிலையில் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. 2 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்து ஐடி ஊழியயராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுபோதைக்கு அடிமையானவர்.
சம்பவ நாளிலும் போதை தலைக்கேற சிகரெட்டை பற்ற வைத்து அதன் தணலை அணைக்காமல் உறங்கி இருக்கிறார். இதனால் சிகரெட் கங்கு மெத்தையில் பட்டு எரியத் தொடங்கியது.
அதிகாலை நேரத்தில் அதிக புகை காரணமாக அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து கதவை உடைத்து நேதாஜியை மீட்டனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, நேதாஜி மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!