குமரியில் பரபரப்பு... காதலியின் வீட்டில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

 
தனுஷ்
 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இளம்பெண்ணின் வீட்டில் பொறியியல் பட்டதாரி இளைஞா் ஒருவர் நேற்று முன் தினம் இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசா விசாரித்து வருகின்றனா்.குலசேகரம் அருகே காவுவிளை பகுதியைச் சோ்ந்த துரைசாமி-தனலெட்சுமி தம்பதியின் மகன் தனுஷ் (22). இவா், குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்தபோது, வேறு சமூகத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

பின்னா் தனுஷின் குடும்பத்தினா் கோவைக்கு இடம் பெயா்ந்தனா். அங்கு, தனுஷ் பொறியியல் பட்டப் படிப்பு படித்து, ஐடி நிறுவனத்தில் பணியில் சோ்ந்தாா். இதனிடையே அந்த மாணவியும் கோவையில் உள்ள கல்லூரியில் சோ்ந்துள்ளார். இவா்களது காதலை இருவரது பெற்றோரும் கண்டித்துள்ளனா்.இதையடுத்து மாணவிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோா் வரன் தேடியதுடன், அவரது கல்லூரிப் படிப்பையும் நிறுத்தி விட்டு, வீட்டில் இருக்கச் செய்துள்ளனா். இதனால் மாணவியை தனுஷால் தொடா்புகொள்ள முடியவில்லை.

ஆம்புலன்ஸ்

இதனிடையே தனுஷின் பெற்றோா் மாணவியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டபோது, மாணவியின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு தனுஷ் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரைப் பாா்த்துப் பேச முயன்றுள்ளாா். ஆனால் அவரால் சந்திக்க முடியவில்லை.இதனால் விரக்தியடைந்த அவா், தனது காதலியின் வீட்டின் மாடியில் ஏறி, வீட்டின் சன்சைடில் கயிற்றைக் கட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

இது குறித்து நேற்று காலை கிடைத்த தகவலின் பேரில், குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்குச்  சென்று, இளைஞரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது