காதலிப்பதாக நடித்து ஒரே நேரத்தில் 2 மாணவிகளை கர்ப்பமாக்கிய இளைஞர்!

 
நீலகிரி
 

நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த 22 வயது பிரவீன், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊட்டியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலுக்கு மாறியது. அதே நேரத்தில், பிரவீனுக்கும் ஊட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. பிரவீன் ஒரே நேரத்தில் இருவருடனும் காதலித்து வந்தார்.

கர்ப்பம்

இதன் பின்னணி சம்பவமாக, கல்லூரி மாணவி கர்ப்பமாகி, பிரவீன் அவரை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி வீட்டில் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. போலீசார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி பிரவீனை தேடி கைது செய்தனர்.

கர்ப்பம் ஸ்கேம் மோசடி சைபர்

தற்போது, ஒரு மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவிக்கு, நவம்பர் 3-ம் தேதி பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இருவரும் குழந்தையுடன் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரவீனை நேரில் காண வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!