நண்பர் உட்கார்ந்த சேரில் தீ வைத்த இளைஞர்.... பதற வைக்கும் வீடியோ!

 
சேரில் தீ
 

குளிர் காய தீ மூட்டி அமர்ந்திருந்த நண்பர்களுக்கிடையே நடந்த ஒரு விளையாட்டான மோதல் பெரும் விபரீதமாக மாறியது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், இளைஞர் ஒருவர் நண்பர் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை தட்டிவிட, அவர் கீழே விழுந்தார். இதனால் இருவருக்கும் இடையே சிறு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை மனதில் வைத்துக் கொண்ட அந்த நண்பர், யாருக்கும் தெரியாமல் நாற்காலியில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். சிறிது நேரம் கழித்து அதே நாற்காலியில் மீண்டும் அமர்ந்த இளைஞர்மீது தீக்குச்சியை உரசி எறிந்தார். உடனே அவரது ஆடையில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது.

தீப்பற்றி எரிந்ததை உணர்ந்த இளைஞர் தரையில் உருண்டு தீயை அணைத்ததால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. நண்பர்களுக்குள் விளையாட்டாக நடந்த செயல் உயிருக்கு ஆபத்தாக மாறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!