சினிமாவை மிஞ்சிய கொடூரம்... 3 சவரன் நகைக்காக பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட இளைஞர்..!

 
சென்னை

 
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் போரூர் ஆர்.இ  நகர் பகுதியில் வசித்து வருபவர் காந்திமதி.   இவர் நேற்று இரவு தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியநிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்த மூதாட்டியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் மூதாட்டி கழுத்தில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

ஆம்புலன்ஸ்
சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த நகையை எடுப்பதற்காக கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மூதாட்டி தூக்கில் தொங்கியபடி நாடகமாடி இருப்பது தெரியவந்தது.இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்த நிலையில் மூதாட்டியின் பக்கத்துக்கு வீட்டுக்காரரான அஜய் தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த அஜயை போலீசார் கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீஸ்


70 வயது மூதாட்டி அணிந்திருந்த செயினை பறிப்பதற்காக மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட படி நாடகமாடி சினிமாவை மிஞ்சிய சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?