தெருநாய் கடித்து இளைஞர் பரிதாப பலி... சென்னையில் சோகம்
சென்னை கொடுங்கையூர் அருகே சோலையம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த அருள், கடந்த 5-ம் தேதி என்.எஸ்.கே. சாலையில் நடந்து சென்றபோது வெறிபிடித்த தெரு நாய் ஒன்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அருள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இளம் வயதில் நடந்த இந்த மரணம் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் தெருநாய்கள் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பாதிப்பு அதிகரித்துள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
