கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளைத் துறந்து, துறவறம் பூண்ட இளைஞர்!

 
உபி

கோடிக்கணக்கான தனது அனைத்து சொத்துக்களையும் துறந்து, தனது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரையும் பிரிந்து, 30 வயதேயான இளைஞர் ஒருவர் துறவறம் பூண்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், பாக்மத் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷித் ஜெயின்(30), டெல்லியில் நடத்தி வந்த தனது கோடிக்கான மதிப்புள்ள துணிக் கடையும் அனைத்து சொத்துகளையுடம் துறந்து, ஜைனத் துறவியாக துறவறம் பூண்டு, ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார்.


கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தனிமை, மரண யதார்த்தம் போன்ற அனுபவங்கள் அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. “மனிதன் தனியாகவே பிறக்கிறான், தனியாகவே விலகுகிறான்” என்ற உண்மையை உணர்ந்த ஹர்ஷித், நான்கு ஆண்டுகளாக வாழ்க்கையின் நோக்கத்தை ஆராய்ந்த பின் ஆன்மிகத்திற்கு திரும்பினார்.

கும்பமேளா துறவறம் பெண்கள்

துறவற தீட்சை ( பெறும் இந்த முடிவுக்கு அவரது தந்தை சுரேஷ் ஜெயின் உட்பட குடும்பத்தினர் முழுமையாக ஆதரவு தெரிவித்தனர். பிரம்மாண்டமான சடங்கின் மூலம் ஹர்ஷித் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கி, சொந்த வாழ்க்கையையும் உலகச் சூழலையும் விட்டு புதிய பாதையை தேர்வு செய்தார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!