கணிதத்தின் மூலம் கடவுளை நிரூபித்த இளம் விஞ்ஞானி... வெடித்த சர்ச்சை!
கணிதத்தின் மூலம் கடவுள் இருப்பதை நிரூபித்துள்ளதாக தென் கொரிய இளம் விஞ்ஞானி யங்ஹூன் கிம் கூறிய கருத்து உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 36 வயதான அவர், கணிதத்தில் ஒரு கோடு வரைய ஒரு புள்ளி அவசியம் போல, இந்த பிரபஞ்சம் உருவாகவும் ஒரு தொடக்கப் புள்ளி தேவை என விளக்குகிறார். அந்த ஆதிப் புள்ளியே கடவுள் என்றும் அவர் வாதிடுகிறார்.

மனித உடல் அழிந்தாலும், உணர்வுகள் குவாண்டம் தகவல்களாக தொடர்ந்து நிலைத்திருக்கும் என கிம் கூறுகிறார். மரணம் என்பது முடிவல்ல, அது ஒரு மாற்றம் மட்டுமே என்ற அவரது விளக்கம் கவனம் பெற்றுள்ளது. வரலாற்றிலேயே மிகச்சிறந்த அறிவாளி இயேசு கிறிஸ்து தான் என்பதும் இவரது கணித ரீதியான கருத்தாக உள்ளது.

உலகிலேயே மிக உயர்ந்த புத்திசாலித்தன குறியீடு தன்னிடமே இருப்பதாக கிம் கூறுவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் குறியீடு 140 என்ற நிலையில், தன்னுடையது 276 என அவர் தெரிவிக்கிறார். இதை பல விஞ்ஞானிகள் மறுத்தாலும், அறிவியலும் ஆன்மீகமும் பிரிக்க முடியாதவை என்ற அவரது வாதம் புதிய சிந்தனையை தூண்டியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
