இன்ஸ்டாவுல அறிமுகமான ஒரே வாரத்தில் வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்த இளம்பெண்... கணவர் அதிர்ச்சி!

 
நேத்ராவதி இளம்பெண் கள்ளக்காதல் திருமணம் நேத்ராவதி இளம்பெண் கள்ளக்காதல் திருமணம்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில், திருமணமானதையும் மறந்து விட்டு, 8 வயது சிறுவனின் தாய், வேறொரு வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொண்ட வீடியோவைப் பார்த்து, கணவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். 

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி நேத்ராவதி (30). இந்த தம்பதியருக்கு கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். டிரைவரான ரமேஷ் லாரி ஓட்டி வருகிறார்.

இன்ஸ்டாகிராம்

திருமணமான புதிதில் தம்பதி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. லாரி டிரைவர் என்பதால் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் ரமேஷ் வெளியே தங்கி வந்துள்ளார். அதே நேரத்தில் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் நேத்ராவதி ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென நேத்ராவதி காணாமல் போய் விட்டார். அவரை எங்கு தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில், நேத்ராவதி சந்தோஷ் என்ற வாலிபரைத் திருமண செய்து கொண்ட வீடியோக்களும், திருமண கோலத்தில் நேத்ராவதி - சந்தோஷ் இருக்கும் புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதைப் பார்த்து நேத்ராவதியின் கணவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் ஒரு வாரத்திற்கு முன்பாக தான் நேத்ராவதிக்கு சந்தோஷ் அறிமுகம் ஆகியுள்ளார். பார்த்த நிமிடமே இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. இதனால் நேத்ராவதி, காதலனுடன் சேர்ந்து வாழ திட்டமிட்டார். அதன்படி கணவர் மற்றும் 8 வயது மகனை தவிக்கவிட்டுவிட்டு சந்தோசுடன் ஓடிப்போய் நேத்ராவதி திருமணம் செய்து கொண்டார்.

இது தொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின் பேரில் நேத்ராவதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?