நெஞ்சை உலுக்கும் சோகம்… மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்த ஷில்பா (30) என்பவர், தனது 5 வயது மகன் அக்ஷயஜித்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அதே வீட்டின் அறையில் ஷில்பா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஷில்பாவின் கணவர், அறையைத் திறந்து பார்த்தபோது இந்த பயங்கர காட்சியை கண்டுள்ளார். மனைவி தூக்கிட்ட நிலையில் இருந்ததையும், மகன் உயிரற்ற நிலையில் கிடந்ததையும் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகனை கொன்றுவிட்டு ஷில்பா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
