பரபரப்பு வீடியோ.. .இன்ஸ்டாகிராமால் 2 இளைஞர்கள் மோதல்... நடுவில் சிக்கி இளம்பெண் படுகாயம்... !

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் சோனிபட்டில் இரு இளைஞர்களிடையே இன்ஸ்டாகிராம் கருத்து குறித்த பிரச்சினை பெரும் மோதலாக வெடித்துள்ளது. இதனையடுத்து ஒரு பெண் காரின் பொனெட்டில் இழுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 9 ம் தேதி செக்டர்-15 பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து போலீசார் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூஜா கார்க் தனது புகாரில், தன்னுடைய சிறிய மகனுக்கும், மற்றொரு சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராமில் நடந்த கருத்து மோதல் காரணமாக, தன் மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
हरियाणा के सोनीपत में दिल दहला देने वाली घटना! कुछ युवकों ने एक महिला को कार से टक्कर मार दी, जिससे वह बोनट पर गिर गई। लेकिन रुकने के बजाय, युवकों ने कार को करीब 1 किलोमीटर तक दौड़ाया! जब कार की रफ्तार धीमी हुई, तो महिला ने हिम्मत दिखाते हुए कूदकर अपनी जान बचाई।
— Kumaon Jagran (@KumaonJagran) March 11, 2025
क्या ऐसे बेखौफ… pic.twitter.com/b4F6WJKnBh
மகனை காப்பாற்ற சென்று தானும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், காரின் பொனெட்டில் இழுக்கப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.போலீசார் தற்போது இந்த சம்பவத்திற்கான 10 வினாடிகள் கொண்ட வீடியோ அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரை வரை எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதேநேரத்தில், பூஜா கார் தனது புகாரைத் திரும்ப பெற்றதாகவும், இது தற்போது சமரசமாகிவிட்டது எனவும் அவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!