மருத்துவமனைக்குள் இளம்பெண் ஓட ஓட விரட்டிக் கொலை!! இளைஞர் பகீர் வாக்குமூலம்!!

 
லிஜி

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள துறைவூர் பகுதியில் வசித்து வருபவர் 40வயது  லிஜி ராஜேஷ். . இவரது தாயார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.  இதனால் அவரைமூக்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதித்தனர்.  தனது தாயை அவர் கவனித்துக் கொண்டிருந்த போது அங்கு  இளைஞர்  ஒருவர் வந்திருந்தார்.
அவர் லிஜியிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம்   முற்றியதை அடுத்து ஆத்திரத்தில்   இளைஞர் லிஜியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து   லிஜி சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த மருத்துவமனை  செவிலியர்களும் மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர்.

 

லிஜி
 ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். மருத்துவமனை ஊழியர்களும், செவிலியர்களும் இளைஞரை பிடித்து வைத்திருந்து காவல்நிலையத்திற்கு தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் பெயர் மகேஷ். இவருக்கு வயது 42. இவர் அலுவா என்ற பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார். 

 

லிஜி
மேலும் மகேஷும் லிஜியும் காதலித்து வந்ததாகவும் இவர்களின் காதலுக்கு லிஜியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்  லிஜி மகேஷுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். அத்துடன்  லிஜி, வீட்டில் பார்த்த வேறு ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு முன்பே மகேஷ் லிஜியுடன் பேச முயற்சித்தும் அவர் பேச மறுத்துவிட்டார். அது போல் திருமணத்திற்கு பிறகும் லிஜியை சந்தித்து தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மகேஷ் கெஞ்சியுள்ளார்.  எதிர்பாராதவிதமாக மருத்துவமனையில் லிஜியை பார்த்ததால் இது குறித்த வாக்குவாதத்தை மகேஷ் தொடங்கினார். அப்போதுதான் லிஜியை மகேஷ் கத்தியால் குத்த முயன்ற போது லிஜி தப்பிக்க முயற்சித்தார். அவர் மீது ஆத்திரத்தில் துரத்தி சென்று 12 முறை சராமாரியாக குத்திவிட்டார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web