காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்… மின்னல் வேகத்தில் தப்பிய மர்ம நபர்கள்!

 
காரிலிருந்து

குன்றத்தூர் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று பரபரப்பான சம்பவம் நடந்தது. சாலையில் சென்ற கார் ஒன்றில் இருந்து திடீரென கதவு திறக்கப்பட்டு, உள்ளே பயணம் செய்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு மர்ம நபர்கள் காருடன் தப்பிச் சென்றனர். இதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனே அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

ஆம்புலன்ஸ்

கீழே விழுந்த பெண் லேசான சிராய்ப்பு காயங்களுடன் போதை மயக்கத்தில் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீஸார், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவருக்கு முதலுதவி அளித்தனர். விசாரணையில் அந்த பெண் சத்யா  (30) என்பதும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

போலீஸ்

பின்னர் அவர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சை பெற்ற பிறகு யாரிடமும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றவர்கள் யார், ஏன் இந்தச் செயலில் ஈடுபட்டனர் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!