விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம் | தமிழ்ப் புத்தாண்டு

 
விஸ்வரூப ஆஞ்சனேயர் ஆஞ்சநேயர்

விழுப்புரம் நகரில் ஆஞ்சனேயர் குளக்கரையில் அமைந்துள்ள ஶ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சனேய சுவாமிக்கு 19-ஆவது ஆண்டாக 5,000 லிட்டர் பாலைக் கொண்டு பாலாபிஷேகம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

167அடி ஆஞ்சநேயர்

விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ ஜெயஜெய ஆஞ்சனேய சுவாமிக்கு தமிழ் வருடப்பிறப்பன்று 5000 லிட்டர் பாலாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 19-ஆவது ஆண்டாக திங்கள்கிழமை காலை பாலாபிஷேகத்துக்கான பூஜைகள் நடைபெற்றன. 90 அடி உயர ஆஞ்சனேய சுவாமிக்கு அரசமங்கலம் சு. வெங்கடேஷ்பாபு சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து, பாலாபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.

delhi hanuman அனுமன் ஆஞ்சநேயர்

இதைத்தொடர்ந்து பெரிய அளவிலான பேரல்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பால், மோட்டார் மூலம் குழாய் வழியாக மேலே ஏற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் பால் பாக்கெட்டுகளை வழங்கினர். 5000 லிட்டர் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சனேயரை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web