2026-ல் விஜய் ஆட்சி… தவெக கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா முழக்கம்!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். 2016-ல் தனித்து நின்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தது போல, 2026-ல் விஜய் ஆட்சி அமைப்பார் என்று அவர் கூறினார். தேர்தல் ஆணையத்தில் உள்ள விஜய் ரசிகர்களே ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைவர் தைரியத்தாலோ, அன்பாலோ அல்ல; தியாகத்தால்தான் உருவாவார் என்றும் அவர் பேசினார். நீட், ஜிஎஸ்டி, இந்தி மொழி என எந்த விஷயம் வந்தாலும் முதல் எதிர்ப்பு தவெகவிடமிருந்துதான் எழும் என்றும் கூறினார். சிபிஐ அலுவலகத்திற்கே மக்கள் விஜய்யை பார்க்க வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திமுக திருமாவளவனை பயன்படுத்துகிறது என்றும், திமுக ஆட்சியில் ஊழல் இல்லை என்று அவர் சொல்ல முடியுமா எனவும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். அவரது கட்சியில் 20 பேர் மட்டுமே உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கொள்கை ரீதியாக பாஜகவை எங்கு எதிர்க்க வேண்டுமோ, அங்கு எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
