அட போங்கப்பா.. நாய் பெயரில் ஆதார் அட்டை! உங்க ஆதாரை இணைச்சுட்டீங்களா?

 
நாய்

உங்க ஆதார் கார்ட்டை பான்கார்டு, ரேஷன் கார்டு, மின்சார கார்டு, பால் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கி எண் போன்ற எல்லாவற்றோடும் இணைச்சுட்டீங்களா? எதுக்கு கேட்கறேன்னா? இந்த முதல் வரியை முழு கட்டுரையையும் படிச்சு முடிச்சுட்டு மீண்டும் ஒரு முறை படிச்சுக்கோங்க. இந்தியாவின் ஒவ்வொரு குடியிருப்பாளருக்காகவும் ஆதார் உள்ளது. புதிதாக பிறந்தவர்கள் முதல் மூத்த குடிமகன் வரை அனைவரும் ஆதார் பதிவு செய்யலாம். ஆனால் இங்கு நாயிக்கு ஆதார் அட்டைகோரி விண்ணப்பித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள குராரு மண்டல அலுவலகத்துக்கு, டாமி என்ற நாய்க்கு, சாதி சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. விண்ணப்பத்துடன் நாய் பெயரிலான ஆதார் அட்டையின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அரசு அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நாய்

சாதி சான்றிதழ் கேட்டதே ஓவர்.. இதில் நாயின் ஆதார் அட்டை இணைக்கப்பட்டிருந்தது இன்னும் ஓவராக இருந்தது. அந்த ஆதார் அட்டையில், டாமியின் பிறந்த நாள் ௨௦௨௨, ஏப்ரல் ௧௪; டாமியின் தந்தை பெயர்----- -----------ஷெரு; தாய் பெயர் ஜின்னி; முகவரியில், பாண்டேபோகார் கிராமம், ரவுனா ஊராட்சி, வார்டு எண் ௧௩, குராரு வட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கெல்லாம் மேலாக, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையில், 'ஆதார் - சாதாரண மனிதனின் அதிகாரம்' என்று இருக்கும். இந்த டாமிக்கான ஆதார் அட்டையில், 'ஆதார் - சாதாரண நாயின் அதிகாரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாய்

 இந்த விண்ணப்பதை நிராகரித்த குராரு மண்டல அதிகாரி சஞ்சீவ் குமார் திரிவேதி, இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், இந்த குசும்பை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, டாமியின் புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும

From around the web