இனி பால் வாங்க ஆதார் கட்டாயம்!! ஆவின் அதிரடி உத்தரவு!!

 
ஆவின் ஆதார்

தமிழகத்தில் அரசு சார்பில் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தி செய்து வரும் பொது நிறுவனம். தமிழகம் முழுவதும் பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி குளிரூட்டி விற்பனை செய்துவ் வருகிறது.    ஆவின்  நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் என பலவகையான  பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.இந்நிலையில், ஆவின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 25 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக பல பகுதிகளில்  ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொள்முதல் அளவு குறைந்து விற்பனை அளவு அதிகரித்திருப்பதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால் உற்பத்தியாளர்கள் பலரும் தனியார் நிர்வாகத்திற்கு பாலை கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளனர். 

Aavin

ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியபோதிலும் மக்கள் அதன் தரத்தின் மீது நம்பிக்கை வைத்து விரும்பி வாங்குகின்றனர். பால் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் அதிகாரிகள் மறுத்தாலும் பல நகரங்களில் பால் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களின் பாலை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

ஆவின் பால்

ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகையுடன் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இவ்வாறு அட்டைகள் மூலம் பால் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதற்கான பணியை மேற்கொள்ளுமாறும் மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web