ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்!

 
ரயில்

ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, பயணிகள் தங்களின் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஆதார் இணைக்காத கணக்குகள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நடைமுறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே ஆதார் எண் கட்டாயம் என ரெயில்வே அறிவித்துள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முன்பதிவுக்கு ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நேரம் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் 12-ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஆனால் ரெயில்வே நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று ரெயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!