ஜூன் 14 வரை ஆதார் அப்டேட் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

 
ஆதார்
 

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் அப்டேட் செய்ய நினைப்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. பொதுமக்கள் ‘myAadhaar’ இணையதளம் அல்லது ‘M-ஆதார்’ செயலி மூலம் எந்தக் கட்டணமும் இன்றி ஆன்லைனில் மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

 ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பு, நேரக்கட்டுப்பாடு  விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும்.. உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு!  

7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மையங்களில் மார்ச் மாதத்திற்குள் இலவசமாக புதுப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை பதிவேற்றுவதன் மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சுலபமாக மாற்ற முடியும். இந்த வசதியால் நாடு முழுவதும் உள்ள ஆதார் அட்டைத்தாரர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் அட்டை

இதற்கிடையே, ஆதார் PVC அட்டைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. UIDAI அறிவிப்பின்படி, PVC ஆதார் அட்டையின் சேவைக் கட்டணம் ரூ.50-இலிருந்து ரூ.75-ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணம் 2026 ஜனவரி 1 முதல் அமலில் உள்ளது. உற்பத்தி, அச்சிடுதல், பாதுகாப்பான விநியோகம் மற்றும் லாஜிஸ்டிக் செலவுகள் அதிகரித்ததாலேயே கட்டணம் உயர்த்தப்பட்டதாக UIDAI விளக்கம் அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!