ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு!!

 
ஆதார் வாக்காளர் அடையாள அட்டை

இந்திய குடிமகனின் ஆதாரமாக ஆதார் அட்டை பயண்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் மூலம் தான்  பெரும்பாலான அரசு சேவைகளைப் பெற  முடியும். போலியாக அரசு சேவைகளை பெறுவதை தடுக்கப்பட்டு வருகின்றன.  அதே நேரத்தில் போலி வாக்காளர்களையும் எளிதில் அடையாளம் காணும் வகையில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.  ஒருவரே பல இடங்களில் வாக்குரிமை வைத்திருப்பது உட்பட பல முறைகேடுகளை  அடையாளம் காணவும், வெவ்வேறு அரசு சேவைகளில் வெவ்வேறு ஆவணங்களை கொடுத்து சேவைகளை பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த இணைப்பை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

ஆதார் வாக்காளர் அடையாள அட்டை

ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் இப்பணியை 2021  ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது  மத்திய சட்ட அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் 2024, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் வாக்காளர் அடையாள அட்டை

இந்தப் பணியை 2 ஆண்டுகளுக்குள்  முடிக்க வேண்டும் என மத்திய அரசு நினைத்திருந்த நிலையில்,  இந்தியாவின்  பெரும்பாலான பகுதிகளில் இந்த பணிகள் பாதியளவுக்கு கூட நிறைவேறவில்லை.  இந்நிலையில் இதற்கான , காலஅவகாசத்தை மத்திய அரசு அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது. அதாவது, 2024 மார்ச்  31ம் தேதிக்குள் அனைவரும் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதுவரை  ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காதவர்கள் https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகள் மூலம் இணைத்துக் கொள்ளலாம். இது தவிர , வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் எனும் மொபைல் ஆப் மூலமாகவும் இணைத்துக்கொள்ளலாம். இதற்காக நடத்தப்படும் முகாம்கள் மூலமும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் ஆதார் கார்டு-வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web