ஆம் ஆத்மி ஸ்வாதி மாலிவால் தில்லி முதல்வராகும் ரேகா குப்தாவுக்கு நேரில் வாழ்த்து!

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இன்று மாலை தலைநகர் டெல்லி முத்லவர் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கலந்துகொண்டுள்ளார்.
தில்லி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்னும் சற்றுநேரத்தில் தில்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்க உள்ளது.
முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளார். இவர் முதல்வராகவுள்ள ரேகா குப்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக குற்றச்சாட்டை எழுப்பிய ஸ்வாதி மாலிவால், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டார். மேலும் தலைநகர் தில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆணவம்தான் காரணம் என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!