ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி

 
ஜெயம் ரவியிடம்  ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல்!
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

இந்த வழக்கில் தற்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராகியுள்ளனர். அப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு வழக்கை அனுப்பி வைக்கப்பட்டது. சமரச மையத்தில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது உடன்பாடு ஏற்படவில்லை. இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. 


அப்போது நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் தனித்தனியாக கார்களில் வந்து கோர்ட்டில் ஆஜராகினர். ஆர்த்தி தன் தந்தையுடன் கோர்ட்டில் ஆஜராகியுள்ளனர். ஆர்த்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கும் தன் இரு மகன்களுக்கும் மாதம் ரூ40லட்சம் ஜீவனாம்சம் வழங்க ரவி மோகனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்கு பதில் அளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது