ஆவின் பால் விலை உயர்வு? பொதுமக்கள் அதிர்ச்சி!
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்போம் என்ற வாக்குறுதியை மீறி ரூ.6 உயர்த்தியதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், 2021-ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ என்பது புதிய வகை பால் பாக்கெட். இதில் வைட்டமின் ஏ, டி சேர்க்கப்பட்டு, கொழுப்புச் சத்து மற்றும் எஸ்.என்.எப் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னர் விற்பனை செய்யப்பட்ட கிரீன் மேஜிக் பால் பாக்கெட் அதே விலையிலேயே தொடர்ந்து கிடைக்கிறது. அதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. எனவே, ஆவின் பால் விலை இருமடங்கு உயர்த்தப்பட்டது என்ற தகவல் தவறானது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
