இரவில் நடந்த பயங்கரம்.. பற்றி எரிந்த அடுக்கு மாடி குடியிருப்பில் சிக்கி 6 பேர் பலி !!

 
தெலுங்கானா

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் சிறியளவில் தீ பற்றி புகை வெளிவந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மள மளவென தீ பற்றி எரிந்து பரவியது. அடுத்தடுத்த தளங்களில் அதிவேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

 

தெலுங்கானா

ஏழாவது மற்றும் எட்டாவது தளங்கள் வரை பற்றி எரிந்த தீயானது அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று தீயை போராடி அணைக்க முயற்சி செய்தனர். மேலும் குடியிருப்பு வளாகத்தினுள் சிக்கி இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் சுமார் 12 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தினால் உடல் கருகி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் 4 சிறுமிகளும் அடங்குவர்.  

தெலுங்கானா

இந்த தீ விபத்து குறித்து செகந்திராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web