வெறும் ரூ40 யில் ஏசி ரூம்கள்!! இந்தியன் ரயில்வே அதிரடி ஆபர்!!

 
ஏசி ரூம்கள்

தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலானவர்களின் ஒரே சாய்ஸ் ரயில்கள் தான். குறைவான கட்டணத்தில் படுக்கை வசதியுடன் சொகுசு பயணம் .  ஆனால்  பல நேரங்களில் ரயில்கள் கிளம்பும் அல்லது சென்றடையும் நேரம் தாமதமாகிறது. ஒரு  சில நிமிடங்கள் தொடங்கிப் பல மணி நேரம் வரையிலும் கூட ரயில்கள் தாமதமாகலாம். அந்த நேரங்களில் ரயில் பயணிகள் ப்ளாட்பார்மிலேயே நீண்ட நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை.  ரயில் சரியான நேரத்திற்கு வந்தாலும் நாம் சில மணி நேரம் முன்கூட்டி ஸ்டேஷனுக்கு வந்துவிட்டாலும் இதே காத்திருத்தல் தான்.  பகல் நேரங்களில் பரவாயில்லை  இரவு நேரங்களில் பெண்கள்  காத்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தும்.  

ஏசி ரூம்கள்

வெயில், மழை, குளிர் என எதுவாக இருந்தாலும் பிளாட்பார்மகளில் இருந்தால் பாதுகாப்பு குறைவு மட்டுமல்ல வசதி குறைவும் தான்.  இந்த காத்திருத்தலை சொகுசாக்க இந்தியன் ரயில்வே   ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. அதன்படி  IRCTC retiring room எனப்படும் ஐஆர்சிடிசி ஓய்வு அறை வசதி பெரும்பாலும் அனைத்து பெரிய  ரயில் நிலையங்களிலும் இருக்கும். இதன் மூலம் கன்பார்ம் அல்லது ஆர்ஏசி லிஸ்டில் இருக்கும் பயணிகள் ரூ40க்கு ரூமை புக் செய்து கொள்ளலாம். அந்த ரூம்களை பொறுத்தவரை சிங்கிள், டபுள் மற்றும் ஏசி எனப் பல வசதிகள் இருக்கும்.  விரும்பியதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். கிளம்பும் இடம் அல்லது சேருமிடம் என இரண்டில் எந்தவொரு ரயில் நிலையத்திலும் இதை நாம் புக் செய்து கொள்ளலாம். ரயில் பயணிகளின் வசதிக்காக வழங்கப்படும் இந்த ரூம்களை நாம் ஆன்லைன், ஆப்லைன் என எப்படி வேண்டுமானாலும் புக் செய்து கொள்ளலாம்.

ரயில் முன்பதிவு
  https://www.rr.irctourism.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்   தேவையான ரூமை புக் செய்யலாம். நமது தேவைக்கேற்ப ஏசி மற்றும் ஏசி இல்லாத ரூம்களை புக் செய்யலாம். ரூம் தேர்வு செய்யும் போது  PNR எண்ணைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.  கன்பார்ம் ரயில் டிக்கெட் அல்லது குறைந்தபட்சம் RAC டிக்கெட்டாவது தேவை. இந்த இரண்டில் எதாவது ஒன்று இருந்தால் மட்டுமே ரூம்களை புக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பயணிகளுக்கு இந்த வசதியை பயன்படுத்த முடியாது.  ரூமிற்கு செல்லும் போது, அடையாள அட்டையாக ஆதார் அட்டை காட்ட வேண்டும்.  அதிலும்  ஒரு PNR எண் மூலம் ஒரு பெட்டை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இருப்பினும், ஒரு டிக்கெட்டில் ஐந்து பயணிகள் இருந்தால், 5 படுக்கைகளை புக் செய்து கொள்ளலாம். அதாவது எத்தனை பயணிகள் இருக்கிறார்களோ இருக்கிறதோ அத்தனை படுக்கைகளை புக் செய்ய முடியும்.  ஓய்வு பெறும் அறையை 12:00 AM முதல் 11:30 PM வரை முன்பதிவு செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் அதிகபட்சம் 48 மணி நேரம் வரை நாம்  ரூம்களை புக் செய்ய முடியும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web