'பகீர்' விபத்து... பேருந்தும் - லாரியும் நேருக்கு நேர் மோதி 10 பேர் உடல் கருகி பலி!
ஆந்திர மாநிலம் மர்க்காபுரம் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனியார் சொகுசு பேருந்து ஒன்றும், எதிரே வந்த டிப்பர் லாரியும் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய அடுத்த சில விநாடிகளில் பேருந்து பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

விபத்து அதிகாலை நேரத்தில் நடந்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பேருந்து முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால், அவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்துக் காயமடைந்தவர்களை மீட்டனர்.
இந்தக் கொடூர விபத்தில் பேருந்திற்குள் சிக்கிய 10 பயணிகள் துரதிர்ஷ்டவசமாக உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் பேருந்து மற்றும் லாரி ஆகிய இரண்டுமே முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளிக்கின்றன. அதிகாலைப் பனிமூட்டம் அல்லது ஓட்டுநரின் தூக்கமே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
