வேகமெடுக்கும் பன்றிக்காய்ச்சல்!! 200க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல முடிவு?!

 
பன்றி

ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் பண்ணைகள் அமைத்து ஏராளமான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, பெங்களூருக்கு பன்றிகள் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ராசிபுரம் அருகே உள்ள போதமலை அடிவாரப் பகுதியில் கல்லாங்குளத்தில் ஒரு பன்றி பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த  சில நாட்களுக்கு முன்பு பண்ணையில் பன்றி ஒன்று அருகே இறந்து கிடந்துள்ளது. இது பற்றி பண்ணையின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பன்றி

தகவலின் பெயரில் அங்கு சென்ற வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் இறந்து  கிடந்த பன்றியின் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பன்றியை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்த பன்றிக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறந்து கிடந்த பண்ணையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல மாவட்ட வனத்துறை மற்றும் கால்நடை துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பன்றி
தற்போது ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பண்ணையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் வரை மக்கள் செல்லவோ, கால்நடைகள் மேய்ச்சலுக்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தற்போது அப்பகுதியில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் 20க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல  உத்தரவிட்ட நிலையில் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web