பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டர்... சுக்குநூறாய் நொறுங்கிய புது கார் - வங்கி ஊழியர் கைது!

 
கார் விபத்து

நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில் மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதியில் நடந்த கார்விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதியில் புதிய கார் ஒன்றில் வந்த இளைஞர், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதினார். அத்துடன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கடைகள் மீதும் கார் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் நிலைதடுமாறி சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

கார் விபத்து

காரை ஓட்டி வந்த இளைஞரையும் அவருடன் இருந்த நண்பரையும் மீட்ட பொதுமக்கள், அவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் சென்னையில் தனியார் வங்கியில் பணிபுரியும் சஞ்சய் (24) என்பது தெரியவந்தது. புதிதாக வாங்கிய காரைச் சஞ்சய் ஓட்டிச் சென்றபோது, வேகத்தைக் குறைக்க பிரேக்கிற்குப் பதிலாகத் தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கார் விபத்து

காரை ஓட்டியவர் மது போதையில் இருந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!