முன்பக்க டயர் வெடித்து கார்கள் மீது மோதி குழந்தை உட்பட 9 பேர் பலி… !

 
acci
 

 

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த எழுத்தூர் அருகே நேற்று முன்தினம் இரவு கோர விபத்து நடந்தது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், தடுப்பு கட்டையை தாண்டி எதிர்திசையில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற 2 கார்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ்

விபத்து தொடர்பாக ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான மதுரை ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த தாஹா அலி (45) என்பவரை கைது செய்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் அமைச்சர் சிவசங்கர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட சொந்த ஊர்களுக்கு அரசு ஆம்புலன்ஸ்களில் 9 பேரின் உடல்களும் நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!