சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு... முதல்வர் ரூ30 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வன் மார்ச் 13 ம் தேதி பணியின் நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் மாவட்ட காவல் அலுவலகம் எதிரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென 4 சக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மார்ச் 24 ம் தேதி மாலை உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன். சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழ்ச்செல்வனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!