பேருந்து மீது பைக் மோதி ஒருவர் கவலைக்கிடம்... 2 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த ஜி.எஸ்.டி சாலை!

 
பேருந்து பேருந்து

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அருகே வண்டலூர் ஜி.எஸ்.டி சாலையில் இன்று காலை ஒரு கோர விபத்து நிகழ்ந்தது. வண்டலூர் மேம்பாலத்தின் கீழே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து ஒன்று பலமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள், உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ்

விபத்து நடந்து நீண்ட நேரமாகியும், விபத்தில் சிக்கிய பேருந்து மற்றும் சிதைந்து போன இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவினர் அப்புறப்படுத்தவில்லை. இதனால், வண்டலூரில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குறிப்பாக, வண்டலூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் அலுவலகங்களுக்குச் செல்வோரும், பள்ளி - கல்லூரி மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால், அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

போலீஸ்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துப் போலீசார், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு விபத்தான வாகனங்களை மெல்ல அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து மெல்ல சீரானது. வண்டலூர் பகுதியில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடப்பதால், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் வேகத்தடுப்புகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!