2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... இளைஞர் பலி!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணபெருமாள் என்பவர் நெல்லைக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். நான்கு வழிச்சாலையில் உள்ள கட்டபொம்மன் சிலை மேம்பாலத்தில் அவர் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டது. எதிரே முத்துக்குட்டி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கிருஷ்ணபெருமாளின் வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் வாகனங்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணபெருமாள் மற்றும் முத்துக்குட்டி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர். அந்த வழியாகச் சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 28 வயதான வாலிபர் கிருஷ்ணபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த முத்துக்குட்டிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்து குறித்து கயத்தாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார். வாலிபர் பலியான இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
