ஒரு தலை காதலால் விபரீதம்.. மாணவி மீது ஆசிட் வீச்சு! அமைச்சர் நேரில் ஆறுதல்!

 
ஆசிட்

கர்நாடக மாநிலம் ராமநாகரா நகரை சேர்ந்த சுமத் (22), என்ற இளைஞர் அதே பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் சிறுமி காதலை ஏற்கவில்லை. எனினும் தன்னை காதலிக்கும் படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிறுமிக்கும் சுமத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கடும் கோபமடைந்த அந்த இளைஞர், சிறுமியை கொலை செய்ய திட்டம்போட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சிறுமி தனது சகோதரருடன் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பைக்கில் சென்ற அந்த நபர் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு மீண்டும் கூறியுள்ளார். 

சிறுமி

அப்போதும் அவர் மறுக்கவே, தயாராக வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சிறுமியின் முகத்தில் வீசினார். பின்னர், அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார்.  

இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் சிறுமியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுமியின் முகம், கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் அந்த சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கைது

மேலும், 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய சுமத் என்பவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web