டிசிஎஸ்(TCS) நிறுவனத்தில் அதிரடி மாற்றம்... ஊழியர்கள் அதிர்ச்சி! புதிய CEO வாக கிருதிவாசன் நியமனம்!

 
டிசிஎஸ் டாடா கல்சட்டன்சி

நாட்டின் மிகப் பெரிய முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்துள்ளது அந்நிறுவனத்தின் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக கே.கிருதிவாசன் நியமிக்கப்படுவார் என்று டிசிஎஸ் நிறுவனம் நேற்று  அறிவித்தது. கோபிநாதன் செப்டம்பர் 15ம் தேதி பதவியில் இருந்து விலகுவார் என்றும், அடுத்த நிதியாண்டில் கிருதிவாசன் பொறுப்பேற்பார் என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

இன்று மார்ச் 16, 2023 முதல் அமலுக்கு வரும் வகையில் கே. கிருத்திவாசனை தலைமை நிர்வாக அதிகாரியாக வாரியம் பரிந்துரைத்துள்ளது. கிருத்திவாசன் ராஜேஷ் கோபிநாதனுடன் மாற்றம் செய்து அடுத்த நிதியாண்டில் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்படுவார்" என்று  அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கிருதிவாசன் டிசிஎஸ்

யார் இந்த கே.கிருதிவாசன்?

கிருத்திவாசன் தற்போது TCSல் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு வணிகக் குழுமத்தின் தலைவர் மற்றும் உலகளாவிய தலைவராக உள்ளார். 1989ம் ஆண்டு குழுமத்தில் இணைந்த அவர், 34 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். TCSல் அவரது நீண்ட பதவிக் காலத்தில், விநியோகம், வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, பெரிய நிரல் மேலாண்மை மற்றும் விற்பனை ஆகியவற்றில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்துள்ளார்.

கிருத்திவாசன் TCS Iberoamerica, TCS அயர்லாந்தின் இயக்குநர்கள் குழு மற்றும் TCS டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் AGன் மேற்பார்வைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், ஐஐடி கான்பூரில் தொழில்துறை மற்றும் மேலாண்மைப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

டிசிஎஸ் முன்னாள் சி இ ஓ

கோபிநாதன் வெளியேறியது குறித்து அதன் தலைவர் என். சந்திரசேகரன் கூறுகையில்... கடந்த 25 ஆண்டுகளாக ராஜேஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த காலகட்டத்தில் ராஜேஷ் தனது முன்னாள் பணிகள் உட்பட பல்வேறு கட்டங்களில் முன்மாதிரியான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 6 ஆண்டுகளில்,  ராஜேஷ் எம்டி மற்றும் சிஇஓவாக வலுவான தலைமையை வழங்கியுள்ளார், மேலும் வாடிக்கையாளர்களின் மாற்றத்தை விரைவுபடுத்த உதவும் வகையில் கிளவுட், அஜில் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளுடன் டிசிஎஸ்-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளார். "டிசிஎஸ் நிறுவனத்திற்கு ராஜேஷின் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளதை நான் ஆழ்ந்து பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web