அதிரடி உத்தரவு... படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்கு..!

 
படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் வசித்து  வருபவர்  ராம்குமார் ஆதித்தன். இவர் மதுரை உயர்நீதிமன்ற  அமர்வில் தாக்கல் செய்த மனுவில்  தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த இலவச பயணத்துக்காக 2024- 2025 கல்வியாண்டில் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும், சுமார் 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பயணத்துக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள்

இவர்கள் பொதுப் பேருந்துகளில் புத்தகப்பை, உணவுப்பைகளுடன் செல்லும் போது பேருந்தில் கூட்ட நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.   இதனால் மாணவ, மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த பயணங்களில் சில  நேரங்களில் விபத்துகளில் சிக்கி மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.  
எனவே அரசு பேருந்துகளில் இலவச பாஸை பயன்படுத்தி பயணிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவ, மாணவிகளுக்காக மட்டும் தனி பேருந்து இயக்க உத்தரவிட வேண்டும் என  கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு அதிக கடமை உள்ளது. தற்போது பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் புகைப்பழக்கம், மது, கஞ்சா  பழக்கங்களுக்கு ஆளாகி வருவது அதிகமாக உள்ளது. மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும் அளவில் நிலைமை உள்ளது.

படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள்
பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன. ஓட்டுநர், நடத்துநர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்காமல் சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குகின்றனர். படிக்கட்டுகளில் பயணம் செய்வது மோட்டார் வாகன விதியின் படி தண்டனைக்குரிய குற்றம். படிக்கட்டில் பயணிப்பவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு கூட செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது